கொரோனா ஒழிப்பு நடவடிக்கையிலிருந்து விலகவுள்ளதாக மிரட்டும் இலங்கை ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் !
கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளில் ஈடுபடும் கிராம உத்தியோகத்தர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை என இலங்கை ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் கமல் கித்சிறி குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக அச்சுறுத்தலுக்கு மத்தியில் பணியாற்ற வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யாவிடின், எதிர்வரும் வாரம் தொடக்கம் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையிலிருந்து விலகவுள்ளதாகவும் இலங்கை ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் கமல் கித்சிறி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சியிடம் வினவியபோது, கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளில் ஈடுபடும் கிராம உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment