மறு அறிவித்தல் வரை மதுபான நிலையங்களை மூடுக! அரசாங்கம் உத்தரவு
நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போது மதுபானசாலைகளும் மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டு இருந்தது.
எனினும் நேற்றைய தினம் 5 மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பொது மக்களின் அன்றாட தேவைகளைத் தாண்டி மதுபான சாலைகளில் மிக நீண்ட வரிசையில் குடிமகன்கள் நின்றதை காணக்கூடியதாக இருந்தது.
0 comments :
Post a Comment