கொரோணாவின் தாக்கம், பௌத்த விகாரை ஒன்றும் இழுத்து மூடப்பட்டுள்ளது!
கொரோனா வைரஸ் காரணமாக தலவாக்கலையில் உள்ள லிந்துல நாகசேன ஸ்ரீ மஹிந்தாராமய விகாரை மறு அறிவித்தல் வரை இழுத்து மூடப்பட்டுள்ளது.
குறித்த விகாரையின் விகாராதிபதியும், மற்றொரு பிக்குவும் அண்மையில் குருநாகல் நாத்தாண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மரணச் சடங்கு ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த மரணச் சடங்கில் பங்கேற்றிருந்த நபர் ஒருவருக்கே அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டு தற்சமயம் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் அறிகுறி மேற்படி இருவருக்கும் ஏற்பட்டத் தொடங்கியதால் விகாரை தற்காலிகமாக மூடப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment