சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை நிறைவு பெற்றது.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள இடங்களில் இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.
ஓய்வூதியம் பெறும் சிரேஷ்ட பிரஜைகள் வங்கிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்டத்தில் விசேட பஸ்களில் ஓய்வூதியம் பெறும் சிரேஷ்ட பிரஜைகள் வங்கிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யாழ். மருந்தகங்களில் அவர்கள் மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்தனர்.
கண்டி மாவட்டத்திலும் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒசுசல பகுதியில் நீண்ட வரிசையில் கூட்டம் நின்றதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் சிரேஷ்ட பிரஜைகள் அஞ்சல் அலுவலகத்தில் வைத்து தமது ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொண்டனர்.
0 comments :
Post a Comment