Thursday, April 2, 2020

ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக மருந்தகங்களை மூன்று தினங்களுக்கு திறக்க ஏற்பாடு

ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள் மூன்று தினங்களுக்கு திறக்கப்படவுள்ளன.

இன்று, நாளை, நாளை மறுதினம் ஆகிய தினங்கள் திகதிகளில் திறக்க அரசாங்கத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

குறித்த மூன்று தினங்களிலும் அரசாங்கத்தினால் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக இலங்கை இராணுவத்தினால் அவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, ஓய்வூதியம் பெறும் சிரேஷ்ட பிரஜைகள் தமது மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வசதியாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமை, ஓய்வூதியம் பெறுபவர்கள் தமது ஓய்வூதிய அட்டையை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்த அனுமதி வழங்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக, ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com