Monday, April 20, 2020

மக்கள் நலனில் அரசாங்கம் பாராமுகமாகச் செயற்பட்டால் கொரோனாவினால் பயங்கர விளைவுகளே ஏற்படும்!

உலகளாவிய ரீதியில் நாளுக்கு நாள் தனது வல்லமையைக் காட்டிவரும் கொவிட் -19 இலங்கையைக்கூட விட்டு வைக்கவில்லை என்பது யாரும் அறிந்த விடயமாக இருந்த போதும், எங்களாலும் இயலும் என்ற தோரணையில் இலங்கையில் கொரோனாத் தாக்கம் குறைந்துவிட்டது என்பதைக் காட்ட அரசாங்கம் பிரயத்தனம் எடுத்துவருகின்றது எனவும் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் மக்கள் ஒரு மீற்றர் இடைவௌி விட்டுத்தான் நின்றார்களா எனவும் கேள்விகள் கணைகள் எழுந்த வண்ணம் உள்ளதுடன், பேருந்துச் சேவையில் மீற்றர் இடைவௌி உள்ளதாக எனவும் கேட்கப்படுகின்றது.

இன்று காலை ஊரடங்கு எடுக்கப்பட்ட பிரதேசங்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள், மக்கள் தான்றோன்றித்தனமாகச் செயற்படுவதையும் இரண்டாவது முறையும் கொரோனாவினால் பாரிய உயிர்ப்பலிகள் ஆவதற்கு வழிவகுக்கும் என்பதை நிதர்சனமாக எடுத்துக் காட்டுகின்றன.

என்றாலும், அரசாங்கம் தேர்தலை வைக்கும் நோக்குத்துடன்தான் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து, இலங்கையில் கொரோனா இல்லை என்பதை மக்களுக்குத் தௌிவுறுத்தி இவ்வாறு கண்மூடித்தனமாக செயற்படுவது எதிர்வரும் பொதுத்தேர்தலை நடாத்துவதற்கோ என அச்சம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினரும், நிபுணர்களும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com