இலங்கையிலுள்ள அனைவரையும் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தத் திட்டம்!
இலங்கையிலுள்ள அனைவரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கேற்ப திட்டங்களை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் நான்கு பேர் கொண்ட குழுவொன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் முக்கிய உறுப்பினரான பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அமல் ஹர்ஷ அவர்கள் குறித்த விடயம் தொடர்பில் குறிப்பிடும்போது, ஜேர்மனியில்தற்போது செயற்பட்டுவருகின்ற சிறு குழுக்களைக் கொண்ட பரிசோதனை முறையை இந்நாட்டிலும் செயற்படுத்துவது தொடர்பில் கருத்திற் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தற்போது அரசாங்கத்திடம் தனியாரிடமும் கொரோனா பரிசோதனைக்கான 50 இயந்திரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது 250 அளவில் பரிசோதனை செய்யப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment