சுவாச பிரச்சினை உள்ள நோயாளிகளின் மாதிரிகளைப்பெற்று கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு வரும் சுவாச பிரச்சினை உள்ள நோயாளிகளின் மாதிரிகளைப்பெற்று கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
பிரதான தொற்றுநோய் தடுப்பு விசேட வைத்தியர் சுகத் சமரவீர இதுதொடர்பாக தெரிவிக்கையில், இந்த நடவடிக்கை அடுத்த வாரத்திலிருந்து 15 பிரதான வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறினார்.
இதேவேளை, கொரோனா தொடர்பான 12 ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.
தேவைகளுக்கு அமைவாக பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment