Tuesday, April 14, 2020

சிறுபோகத்தின்போது அதிகளவு தானியங்கள் இலங்கையில் பயிரிடப்படும். இறக்குமதிக்கு ஆப்பு

சிறுபோகத்தின் போது பாசிப்பயறு, கௌப்பி போன்ற பயிர்களை அதிகளவில் பயிரிடுவதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையில், சில தானிய வகைகளை இறக்குமதி செய்ய இயலாதமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் சிறுபோக செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி வீரகோன் தெரிவித்துள்ளார்.

சில பகுதிகளில் 80 வீத செய்கை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

4 இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் இம்முறை சிறுபோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் சிறுபோக செய்கை தொடர்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கவுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com