குருணாகல் மாவட்டமும் கொரோனாவினால் அபாய நிலைக்குள்ளாகியுள்ளது! - அவைஅ சங்கம்
குருணாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவிச் செல்வதையடுத்து, குருணாகல் மாவட்டமும் ஆபத்தான நிலைக்குள்ளாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
கடந்த மூன்று நாட்களுக்குள் மாவட்டத்திலிருந்து 10 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் வடமேல் மாகாண ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இந்திகா ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்த நிலைமை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்பினை உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் இராணுவ வீரர்கள் என்றும் அவர்களும் குருணாகல் மாவட்டத்திலுள்ள பெரும்பாலானோர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்றும் அது பெரும் பிரச்சினைக்கு வழிவகுத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment