Friday, April 17, 2020

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் : பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்தார்.

வடக்கிலுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சு ஆகிய எங்களிடம் உள்ளது . கொழும்பைப் போன்று கொரோனா வைரசு தொற்று அதிகம் உள்ள இடமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. எனவே தற்போதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழ்ப்பாண மக்களுக்கு நான் இரண்டு கோரிக்கைகளை முன் வைப்பதாக தெரிவித்தார்

ஒன்று ஊரடங்கு வேளையில் வீடுகளில் தனிமையாக இருங்கள்

மற்றையது உண்மையை பேசுங்கள் ஏனெனில் நாங்கள் உங்களுக்காக சேவையாற்ற தயாராக இருக்கின்றோம் எனினும் நீங்கள் உண்மையைக் கூறாது விட்டால் நாம் எந்த வித செயற்பாட்டிலும் ஈடுபட முடியாது வடக்கில் உள்ள மக்களள் இந்த இரண்டு கோரிக்கைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com