Saturday, April 25, 2020

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மே மாதம் 4ஆம் திகதி திங்கட்கிழமை 5 மணி வரையில் நடைமுறையிலிருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி காலை 5 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். இதன் பின்னர் மே மாதம் 1ஆம் திகதி, வெள்ளிக்கிழமை வரையில் இந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது இரவு 8 மணி தொடக்கம் பின்னர் காலை 5 மணி வரையிலாகும்.

கொழும்பு, கம்பஹா களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அரச, தனியார் ஆகிய 2 பிரிவுகள் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த பொழுதிலும் மே மாதம் 4ஆம் திகதி திறக்கப்பட்டு செயலபடக்கூடிய வகையில் சம்பந்தப்பட்ட சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்படும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com