த.தே.கூ வின் சுவிஸ் கூடாரமும் கொரோணா தொற்றுக்குள்ளானது, உறுப்பினர்கள் சிறிதர் தியேட்டரில் தஞ்சம்!
உலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோணா வைரஸ் மக்களை மாத்திரமல்லாது அரசியல் கட்சிகள் மற்றும் உலக பொருளாதாரம் என்பவற்றை தீவிரமாக பாதித்து வருகின்றது.
இலங்கையில் வைரஸ் தாக்கத்தினால் பல அரசியல் கட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவை செயலிழந்து காணப்படுகின்றது. கட்சிகளின் செயற்பாடின்மை காரணமாக தென்பகுதி மக்கள் மாத்திரமன்றி நாடுபூராவுமுள்ள மக்கள் பலர் தாமரை மொட்டுப்பக்கம் தாவிவருவதை அவதானிக்க முடிகின்றது.
அந்த வரிசையில் சுவிட்சர்லாந்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூடாரம் ஒன்றும் வைரஸ் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. கொரோணா தாக்குலுக்குள்ளான சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் சிறிதர் தியேட்டரில் தஞ்சமடைந்துள்ளது. தஞ்சமடைந்த அவ்வொன்றியத்தின் நிர்வாகத்தினர் வடமராட்சி கிடக்கிலுள்ள தமது உறவுகளுக்கு உதவுமாறு ஈபிடிபி என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரை கேட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் கொரோணாவின் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளான தமது கிராம மக்களுக்கு உதவவென சுவிஸ் வாழ் வடமராட்சி மக்களிடம் வசூலித்த பணத்தை அவர்கள் ஈபிடிபி யிடம் வழங்கி வடமராட்சி கிழக்கு மக்களுக்கு உதவுமாறு கருணை மனுக்கொடுத்ததன் பிரகாரம் அக்கட்சியின் தலைவர் டக்களஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கேற்ப கட்சி உறுப்பினர்கள் வடமராட்சி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் பங்காளிக்கட்சிகளும் செயலிழந்துள்ள நிலையில் வடகிழக்கில் அரச அனுசரணையுடன் ஈபிடிபி யினர் மக்களுக்கு பல்வேறு உதவிகளை புரிந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment