Saturday, April 4, 2020

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று : யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் .

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பலாலி தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலுள்ள பத்துப் பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவர்களில் மூன்று பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்திலிருந்து வந்த மதகுருவின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கே தொற்று ஏற்பட்டுள்ளது.

பத்து பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்த ஆய்வுகூடப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.

அவர்களில் மூவருக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே குறித்த மதகுருவுடன் தொடர்பினை பேணி நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com