Friday, April 24, 2020

அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் வெளியாகியுள்ளன.

2020 ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி கூடிய அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சரவை பேச்சாளர்களான
உயர்கல்வி,தொழில் நுட்பம் புத்;தாக்கமம் தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களும் கௌரவ பெருந் தோட்டத்துறை மற்றும் ஏற்றுமதி விவசாயத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பதிரண அவர்களும் கலந்து கொண்டனர்.

குறுகிய கால தேவைகள் தொடர்பிலான நிதி தேவைக்கான சார்க் வலயத்தின் உடன்பாட்டின் அடிப்படையில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளுதல். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உள்ளூர் இறக்குமதியாளர்களுக்கு தனிப்பட்ட தமது இறக்குமதிக்காக உள்ள தடை தொடர்பில் மேன்முறையீட்டை நிதி அமைச்சுக்கு சமர்ப்ப்பிப்தற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல். மோட்டார் வாகன மற்றும் ஏனைய பொருட்களை ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களிலிருந்து விடுவிப்பதற்காக நிவாரணம் வழங்குவதற்கென பிரதி பொலிஸ்மா அதிபர் புசெல்ல அவர்களின் தலமையில்; குழுவொன்றை நியமித்தல்.

இதுவரையில் இந்தியாவிற்கு மாத்திரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பங்களிப்புடன் 580 இலங்கை மாணவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். இதற்கமைவாக கட்டம் கட்டமாக அனைத்து நாடுகளிலும் உள்ள மாணவர்கள் மற்றும் தொழிற்துறையினரை நாட்டுக்கு அழைத்தல் இதற்காக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் மூலம் விசேட இணையதளமொன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தற்போது மொத்த உரம் கொழும்புக்கு கிடைத்திருப்பதுடன் இந்த உரம் விரைவில் சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. உள்ளூர் விதை உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் அத்தியாவசிய விதைகளை இறக்குமதி செய்தல், மற்றும் எதிர்காலத்தில் உள்ளூர் விவசாய தொழிற்துறைக்கான பங்களிப்பை 8 சதவீதம் தொடக்கம் 12 சதவீதம் - 13 சதவீதம் வரையில் அதிகரித்தல்.
சமீபத்தில் தேயிலை ஏல விற்பனையில் கிடைத்த வெற்றிகரமான பெறுபேற்றின் அடிப்படையில் 2.3 பில்லியன் ரூபாவை தேயிலை சபைக்கு செலுத்துவதற்கு முடிந்துள்ளது. இதே போன்று தெங்கிற்காக சிறந்த கோரிக்கை இடம்பெற்றதினால் பாம் எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடிந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையின் கீழ் 25 இலட்சத்து 40 ஆயிரம் சமுர்த்தி பயனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 15 இலட்சத்து 11 ஆயிரத்து பயனாளிகளுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக சுமார் 60 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயிகளின் உற்பத்திக்கு உறுதி செய்யப்பட்ட விலையை பெற்றுக்கொடுத்தல்.

இதற்கமைவாக உள்ளூர் விவசாயத் துறையை மேம்படுத்தி விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்கு எதிர்வரும் சிறுபோகத்தில் முக்கிய 14 உற்பத்தி பயிர்களுக்கு உறுதி செய்யப்பட்ட விலை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகளுக்கு அமைவாக சந்தையில் அறுவடைகளுக்கான கொள்முதல் இடம்பெறாத பட்சத்தில் அரசாங்கம் தலையிட்டு சம்பந்தப்பட்ட விலைகளுக்கு விவசாயிகளிடமிருந்து இந்த உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்யவுள்ளது.

அரசாங்கத்தினால் புதிதாக நியமனம் வழங்கப்பட்ட 54 ஆயிரம் பட்டதாரிகளுக்கான கொடுப்பனவு இதுவரையில் கிடைக்கவில்லையாயின் துரிதமாக அதனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளல். தொடர்பாடல் துறையின் கீழ் ஊடகவியலாளர்கள் பாடகர்கள் நடன கலஞைர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தொழில்துறையினருக்கு விசேட கடன் நடைமுறை ஒன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.

2020 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் உள்ளுர் சுற்றுலா பிரதிநிதிகளிடமிருந்து திரட்டப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை விடுவித்தல். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி உரிமையாளர்களுக்கு துரிதமாக கடன் நிவாரணத்தை வழங்குதல். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட நிறுவனங்களின் சுகாதார பாதுகாப்பு தயாரிப்புகளை விநியோகித்தல் நிதியுதவி வழங்குதல் மற்றும் ஊக்கப்படுத்துவதற்காக விசேட அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டது. சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் நோர்வே ஹேபர்ட் பல்கலைக்கழகத்திற்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை நீடித்தல். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சிற்கான முத்துராஜவெல இரட்டை குழாய் கட்டமைப்பை முழுமையாக செப்பனிடுவதற்காக மேலதிக பாகங்களை கொள்வனவு செய்யவதற்கு அனுமதி வழங்கல். லுணுகம்வெஹர காட்டு யானை முகாம் மத்திய நிலையத்தை அமைத்தல் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் திருத்தப் பணி தொடர்பான ஒப்பந்தத்தை நீடித்தல் ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com