Sunday, April 26, 2020

ஆட்டத்தை ஆரம்பித்தார் ரணில் விக்கிரமசிங்கே! சஜித் கட்சி ஆதரவாளர்களுக்கு ஐதேக தலைமைப்பீடம் ஆப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ள முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அனைத்து ஆதரவாளர்களினதும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும், மற்ற கட்சிகளுடன் இணைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமைகளைத் இரத்து செய்து, அவர்களது இடத்திற்குப் புதிதாக ஆட்களை நநியமிக்கவும் கட்சி முடிவு செய்துள்ளது. சென்ற 23 ஆம் திகதி கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய கட்சித் தலைமையகத்தில் கூடிய கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com