வவுனியாவில் நீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
வவுனியா - சிவபுரம் வீதியில் நீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் சைக்கிளுடன் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
4 ஆம் கட்டை கற்பகபுரத்தை சேர்ந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெலுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment