Saturday, April 11, 2020

ஆழ்கடல் தேடலில் அகபட்டுக்கொண்டது பாரிய அளவு போதைப்பொருள்

கடற்படையினர் மேற்கொண்ட ஆழ்கடல் தேடுதல் வேட்டையின்போது பாரிய அளவு போதைப்பொருள் அகப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். 260 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் மெதபெடமின் எனும் ஐஸ் போதைப்பொருள் 56 கிலோ கிராமும் கடற்படையினரிடம் அகப்பட்டுள்ளது.

அந்தப் போதைப் பொருட்களின் விலை 327 கோடி ரூபா பெறுமதியாகும் என கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 14 நாட்கள் தொடர்ந்து கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலில் நேற்றைய தினம் அதிகாலை வௌிநாட்டிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட படகொன்று கைப்பற்றப்பட்டதோடு, அதிலிருந்த போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டது.

எந்தவொரு நாட்டினதும் தேசியக் கொடியின்றி இலங்கைக்குள் நுழைந்த அந்தப் படகிலிருந்து ஈரான் நாட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்ற மூவரும் கைதுசெய்யப்பட்டனர் எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com