றிசார்ட் பதுயுதீன் சிஐடி யிலிருந்து வெளியேறினார்.
முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதுயுதீன் சீஐடி யினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன்று காலை சிஐடி யின் தலைமைக் காரியாலயத்திற்கு வரவழைக்கப்பட்ட அவரிடம் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் 4 மணிநேர விசாரணை இடம்பெற்றுள்ளது. விசாரணைகளை முடித்துக்கொண்டு அவர் வீடு திரும்பியுள்ளார்.
இதே சம்பவம் தொடர்பில் அவரது சகோதரன் சிஐடி யினரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கைது தொடர்பில் கருத்துரைத்த பொலிஸ் பேச்சாளர் குண்டுதாரிகள் மற்றும் அதற்கு உதவி புரிந்தோருடன் றிசார்ட் பதியுதீன் குடும்பத்தினருக்கு நேரடித்தொடர்பு இருந்தமைக்கான போதிய ஆதாரங்கள் உண்டென தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ரியாத் பதியுதீனின் கைது குறித்து நேற்று புதன்கிழமை இரவு முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ள றிசார்ட் பதுயுதீன் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
'நானோ, எனது குடும்பத்தினரோ எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டவர்களில்லை, இது ஒரு அரசியல் பழிவாங்கல். இதற்கெதிராக நாம் நீதிமன்றை நாடவுள்ளோம்'
0 comments :
Post a Comment