க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரு நாட்களுக்குள்
2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகளை ஆவணப்படுத்தும் செயற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதும் அவற்றை கல்வியமைச்சின் இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment