தீப்பிடித்ததில் தகப்பன் மகள் பலி! தாயும் மகனும் வைத்தியாசாலையில்!
பலாங்கொடை ருக்அத்தண பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் பட்டாசு , மண்ணெண்ணெய் மற்றும் எரிபொருள் விற்பனைக்கு வைத்திருந்ததன் காரணமாக தீ பரவியதாக போலீசார் நம்புகின்றனர்.
சம்பவத்தில் தாயும் மகனும் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளர். ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதுடன், தீயில் எரிந்த மகளின் சடலம் முதலில் 200 மீட்டர் தொலைவில் உள்ள குழி ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
இருப்பினும், தந்தையின் உடல் கண்டுபிடிக்கப்படாததால், போலீசாரும், அப்பகுதியில் வசிப்பவர்களும் தேடுதல் நடத்திய போது கடையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றில் அவரது சடலம் கிடந்ததை கண்டெடுத்துள்ளனர்.
தீப்பற்றியதை தொடர்ந்து அவர்கள் நீரினுள் பாய்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment