Monday, April 6, 2020

கொரோனா வைரஸ் சவாலை வெற்றிகொள்ள முன்னெடுக்கும் திட்டங்களை பலவீனப்படுத்த வேண்டாம் என கேட்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்காமல் இருப்பது சகலரதும் பொறுப்பாகும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொவிட் நைன்ரீன் நோய் தொற் றை தடுப்பு தொடர்பாக மாத்தறையில் கடந்த 3ஆம்திகதி நடைபெற்ற எதிர்கட்சி உறுப்பினர்களுடபான சந்திப்பின் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கொரோனா வைரஸ் தாக்க சவாலை வெற்றி;கொள்ள முன்னெடுக்கும் திட்டங்களை பலவீனப்படுத்த வேண்டாம் என்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பூகோள மட்டத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படும். இந்த சவாலையும் வெற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், தேசிய உற்பத்திகளை வலுப்படுத்த அரசாங்கம் பல திட்டங்களை வகுத்துள்ளது என கூறினார்.

இதற்கமைய ஏப்ரல் 9ஆம் திகதி தேசிய மட்டத்தில் நாடுத்தழுவிய ரீதியாக வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கையில் அனைவரும் ஈடுபட பயிர்ச்செய்கைக்கான கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழ்நிலையில், உணவுப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் கிராமிய மட்டத்தில் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியது மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com