கண்காணிப்பு முகாம்களிலிருந்து நேற்றும் பலர் வீடு திரும்பினர்
புனானை மற்றும் கல்கந்தை மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட 20 பேர் நேற்று வீடு திரும்பியுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதுவரை 3,701 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், நேற்று முன்தினம் மாத்திரம் 249 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பூஸ்ஸ தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்தில் இருந்த மேலும் 11 பேர் நேற்று வீடு திரும்பியுள்ளனர்.
அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுப்பப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படைக்கு சொந்தமான பூஸ்ஸ தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்தில் தொடர்ந்தும் 31 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரை அங்கிருந்த 68 பேர் தனிமைப்படுத்தலின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment