கொரோனாவை மறைக்கும் நபரால் ஊருக்கே பேரிடி... யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதி பெறுவதற்கு முன்னர் கொரோனா நோயாளி ஒருவர் கைட்ஸ் பகுதியில் ஒழித்துக் கொள்ள முயற்சித்தமையினால் ஊர்மக்களின் நன்மை கருதி, அந்தப் பகுதியில் நோய்க்கிருமிக் காவிகளை அழிப்பதற்காக மருந்து விசிருவதற்கு கடற்படையினர் ஆவன செய்துள்ளனர்.
குறிப்பிட்ட நோயாளி அரியாளை சுவிட்சர்லாந்து மதபோதகரின் ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டதனாலேயே பொலிஸாரும் சுகாதாரப் பகுதியினரும் தேடிவருகின்றனர்.
குறித்த நபர் கொரோனா பற்றிய தௌிவின்மையினால் இருப்பதனாலேயே யாழ்ப்பாணம் கைட்ஸ் பிரதேசத்தில் அங்குமிங்குமாக ஒழிந்து திரிந்துள்ளார். நோய் தீவிரமடையவே குறித்த நபர் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
இதனால் பிரதேசத்திலுள்ள சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளின்படி, கடற்படையினரின் ஆலோசனையின்படி வடக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அத்மிரால் கபில சமரவீர அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அப்பகுதியில் நோய்க்காவிகளை அழிப்பதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment