யாழ்ப்பாணம் - கட்டைக்காடு கடற்பரப்பில் 93 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - கட்டைக்காடு கடற்பரப்பில் 93 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
டிங்கி படகொன்றினூடாக கரைக்கு கொண்டுவரப்பட்ட போது, கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - தாளையடி பகுதியை சேர்ந்த 21 மற்றும் 35 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
கைப்பற்றப்பட்ட படகும் கேரள கஞ்சா பொதிகளும் தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment