பலங்கொடயில் 653 பேர் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தலில்...
வௌிநாடுகளிலும் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழில்களில் புரிந்துவிட்டு, பலங்கொட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குள் வருகைதந்த 653 பேர் தற்போது தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என, பலங்கொட நிருவாக பொதுச் சுகாதார பரிசோதகர் கே.எம்.என்.ஸீ. ஜயவிக்கிரம தெரிவித்தார்.
வௌிநாடுகளுக்குச் சென்றுவந்த 103 பேரும கொழும்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்றுவந்த 550 பேரும் இவ்வாறு வீடுகளுக்குள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
பலங்கொட சுகாதார வைத்திய அதிகாரி என். ரிபாய்தீன் அவர்களின் ஆலோசனையின் பேரில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் இவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன், அவர்களில் 182 பேர் 14 நாட்கள் கொண்ட தனிமைப்படுத்தலைப் பூர்த்திசெய்யவுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment