ஏப்ரல் 6 - 10 வரை மீண்டும் வீடுகளிலிருந்து பணிபுரியவும்! - ஜனாதிபதி ஊடகப்பிரிவு
நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை வார நாட்களில் பணிபுரியும் நாட்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் தத்தமது வீடுகளிலிருந்தும் நாட்களாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற வாரமும் வீடுகளிலிருந்து கடமை புரியும் நாட்களாகவே அறிவிக்கப்பட்டிருந்தன.
கொரோனா வைரசுத் தொற்றினால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்த பகுதிகளான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகியவற்றில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படாமல் மீண்டும் நீடிப்புச் செய்யப்படும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தற்போதுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6.00 மணிக்குத் தளர்த்தப்பட்டு, மீண்டும் அன்று பிற்பகல் 2.00 மணிக்கு அமுலுக்கு வரும்.
இந்த மாவட்டங்களில் அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய விடயங்களுக்காக ஏனைய மாவட்டங்களுக்குப் பயணிப்பது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி இறக்குவதற்காக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அசிரத்தை காட்டுவோருக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்படும்.
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீடுகளிலிருந்தே கொள்வனவு செய்யக்கூடிய முறையில் அரசாங்கம் ஆவன செய்துள்ளது.

0 comments :
Post a Comment