Friday, April 3, 2020

உலகில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் ஓரிலட்சம்... உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட மரணங்கள் 50000!

உலகில் கொரோனா வைரசுத் தொற்றுதலுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளோர் ஓரிலட்சத்தையும் தாண்டியுள்ளது என்பதுடன் அந்த ஆட்கொல்லி நோய்க்கு ஆளாகியோரின் எண்ணிக்கை 50 000 என அறியவருகின்றது.

ஜோன்ஸ் ஹெப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகளின்படி, உலகளாவிய ரீதியில் 51485 பேர் கொரோனா வைரசுத் தொற்றினால் பலியாகியுள்ளனர். கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்தத் தொகை 1,002,159 ஆகும்.

ஜோன்ஸ் ஹெப்கின்ஸ் தரவுகளுக்கு ஏற்ப அதிகமாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நாடுகள் வருமாறு -

அமெரிக்கா - 236,339
இத்தாலி - 115,242
ஸ்பைன் - 110,238
ஜேர்மன் - 84,600
சீனா - 82,432
பிரான்ஸ் - 59,929
ஈரான் - 50,468
ஐக்கிய இராச்சியம் - 34,164
சுவிட்சர்லாந்து - 18,827
துருக்கி - 18,135
பெல்ஜியம் - 15,348
நெதர்லாந்து - 14,784
அவுஸ்திரியா - 11,108
கனடா - 10,182

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com