இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 03 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 222 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இதேவேளை, கொழும்பு மாநகர சபையில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் 200 பேரிடம் இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment