இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உறுதிசெய்யப்பட்ட 13 நோயாளர்கள் பதிவாகியிருப்பதாக கொவிட் 19 தொற்று பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதிசெய்தார்.
இந்த 13 நோயாளர்களில் 7 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டிருந்தவர்கள்.
ஒருவர் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் 12 வயதைக் கொண்ட சிறுவன் ஆவான்.
மேலும் 4 பேர் வெலிசறை கடற்படை முகாமின் பதிவானதுடன் மற்ற நோயாளி மொனராகலை வைத்தியசாலையில் பதிவாகியுள்ள கடற்படை வீரர் ஆவார் என்று பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
0 comments :
Post a Comment