பேலியகொட மீன் சந்தையில் வியாபாரிகள் 350 பேருக்கு பீஸீஆர் பரிசோதனை
பேலியகொட மீன் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பணியாட்கள் பீஸீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கொவிட் - 19 தொற்றுக்குள்ளானமை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
குறித்த நபர் பேலியகொட மீன் சந்தைக்கு வந்து போயுள்ளமை தொடர்பிலேயே இன்று காலை மீன் சந்தையிலுள்ள 350 பேர் பீஸீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பேலியகொட மீன் சந்தையில் இன்று மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெறும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. அதற்கேற்ப சில்லறை வியாபாரத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்தது எனத் தெரிய வருகின்றது.

0 comments :
Post a Comment