ஆறு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 288 பேர் கைது
குறித்த காலப்பகுதியில் 71 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, கடந்த 20ஆம் திகதி முதல் நேற்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 8 ஆயிரத்து 739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் 2 ஆயிரத்து 149 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி பயணிப்போருக்கு பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment