கற்பிணிப்பெண்களுக்கு அவசரமா? அழையுங்கள் இதோ இலக்கம்..
கர்ப்பிணித் தாய்மார்களுக்காக 24 மணி நேர தொலைபேசி சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பிரசவ மற்றும் பெண் நோயியல் மருத்துவர்கள் சங்கம் இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கமைய 071 030 1225 எனும் தொலைபேசி ஊடாக தங்களுக்கான பிரச்சினைகளுக்கு விசேட வைத்திய நிபுணர்கள் மூலம் பதில் வழங்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் தற்போதுள்ள நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment