Sunday, April 12, 2020

இன்று பி.ப. 2 மணியாகும்போது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 203

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் தொகையைக் குறைப்பதற்காக அரசாங்கமும், சுகாதாரப் பிரிவினரும், இராணுவத்தினரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் பல்வேறு முன்னெடுப்புக்களை எடுத்துவருகின்ற ​போதும், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளதென்பதைப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

இன்று பிற்பகல் 2.00 மணியாகும்போது, கொரோனா தொற்றாளர்களாக ஆறுபேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா தொற்றாளர்கள் 203 பேர் எனத் தெரியவருகின்றது. 55 பேர் பூரண சுகமடைந்து வௌிச்சென்றுள்ளனர் என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com