இறக்குமதி செய்யப்படும் 15 பயிர்களை நாட்டில் உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பம்
இறக்குமதி செய்யப்படும் 15 பயிர்களை நாட்டில் உற்பத்தி செய்வதற்கு நாடாளாவிய ரீதியிலான வேலைத்திட்டம் இன்று ஆரம்பமானது. தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம் இதனை முன்னெடுக்கின்றது.
இறக்குமதி செய்யப்படும் சோளம் பாசிப்பயறு வேர்க்கடலைஇ குரக்கன்இ பெரிய வெங்காயம்இ பச்சை மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியன் இந்த திட்டத்தின் கீழ் உற்பத்திக்காக அறிமுகம் செய்யப்பட்வுள்ளன
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமுகமாக உணவு உற்பத்தியை விரைவுபடுத்துவதற்காக அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மகாவலி விவசாய நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள சகல நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு இந்த தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று ஆரம்பமான இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 65 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment