தனிமைப்படுத்தலுக்கான கால எல்லை 14 இலிருந்து 21 வரை நீளுகிறது!
தனிமைப்படுத்தலுக்கான நாட்களை 21 வரை நீடிப்பதற்கு தேசிய செயற்பாட்டு மையம் தீர்மானித்துள்ளது. இதுவரை14 நாட்கள் மட்டுமே கொரோனா தொற்றாளர்கள் என இனங்காணப்பட்டோருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்த கால எல்லைக்குள் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னர் சிலருக்கு கொவிட் - 19 தொற்றியுள்ளதனாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
மேலும் தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்புவதற்கு முன்னர் பீ.ஸீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இதுவரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு பீ.ஸீ.ஆர் பரிசோதனை நடத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment