Saturday, April 4, 2020

உலக வங்கி இலங்கைக்கு 128 தசம் ஆறு மில்லியன் டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அவசர உதவிகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக உலக வங்கி இலங்கைக்கு 128 தசம் ஆறு மில்லியன் டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளது.

உலக வங்கிக்கு உட்பட்ட சர்வதேச அபிவிருத்தி அமைப்பு (ஐடிஏ) மற்றும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி (ஐபிஆர்டி) ஆகியன இந்த நிதி உதவியை வழங்க தீர்மானித்துள்ளன

2020 முதல் 2023 வரையிலான வரவு செலவத்திட்டத்திப் ஊடாக அந்த இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது
கொரோனா தொற்றை கண்டறியவும், அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளவும்இலங்கையின் சுகாதாரத்துறையை வலுப்படுத்துவதற்கும் இந்த நிதி உதவும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாட்டை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கண்டு பிடிக்கவும் அதனை தடுக்கவும் அதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த செயற்றிட்டத்தின் மூலம் இலங்கை அவசர நிலைகளை சமாளித்துக்கொள்
ளும் விடயத்தில் முன்னேற்றமடையும் எனவும், இலங்கை தேசிய தோற்று நோயியல் மையம் போன்ற மையங்களை வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com