Monday, March 9, 2020

ஹிஸ்புல்லா என்ற கரட்டி ஓணான் சவுதி அரேபியாவை காட்டி அரசை வெருட்டி செய்ய முனைகின்றது.

பட்டிகலோ கம்பஸ் என்ற பெயரில் சவுதி சுல்தான் ஒருவரின் உதவியில் கட்டப்பட்ட பல்கலைக்கழகத்தை கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இலங்கை அரசு எடுப்பதற்கு முடிவு செய்துள்ளது. அவசர தேவை ஒன்றின்போது, அரச மற்றும் தனியார் சொத்துக்களை அரசுடமையாக்கிக்கொள்வதற்கு அரசிற்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இப்பல்கலைக்கழமானது எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இக்கட்டிடம் முற்றிலும் இராணுத்தினரின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், கொரோணா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அங்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில் இவ்விடயத்தினை தடுப்பதற்கு ஹிஸ்புல்லா குழந்தைத்தனமான கறட்டி ஒணான் விளையாட்டுகளை ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகின்றது. மத்திய கிழக்கிலுள்ள ஹிஸ்புல்லாவிற்கு நெருக்கமான வியாபாரிகள் சிலர் இலங்கை அரசின் உயர் மட்டத்தினரை தொலைபேசியில் அழைத்து குறித்த பல்கலைக்கழகம் சவுதி அரசின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டதென்றும் , அதனால் இலங்கை அரசின் மீது சவுதி அரசு ஆத்திரம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் , சவுதி பத்திரிகைகளும் இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களின் மதசுதந்திரத்தை நசுக்குவதாக செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேற்குலகு , சீனா , இந்தியா என வல்லரசுகளையே ஒரு பொருட்டென கருதாத மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை ஹிஸ்புல்ல சவுதியை கொண்டு மிரட்டலாம் என கருதுவது, சிறுபிள்ளைத்தனமானதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com