Tuesday, March 24, 2020

இந்தியா முழுவதும் LockDown. இலங்கையரின் அன்றாட வாழ்வு ஸ்தம்பிதம்!

நாளைய தினம் முழு இந்தியாவையும் மூன்று வாரங்களுக்கு LockDown செய்வதற்கு இந்திய அரசு தீர்மானித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாட்டைக் கொரோன வைரசிடமிருந்து பாதுகாப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுத்தாக நாட்டு மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று வாரங்களிலும் இந்திய மக்கள் தமது இடங்களை விட்டு வௌிச்செல்வது முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் தற்போதைக்கு 519 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 பேர் இறந்துள்ளதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இவ்வாறு இந்தத் தீர்மானம் இலங்கை மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பைச் செலுத்துவதால் இலங்கை அரசு பாரியதொரு சிக்கலுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. காரணம் இலங்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களில் பெரும்பாலானவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவனவாகும்.

இலங்கை அரசாங்கம் தற்போது ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ள நிலையில் இந்திய அரசின் மேற்படி தீர்மானம் இலங்கையரின் அன்றாட வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்யும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. /span>

No comments:

Post a Comment