நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம்.. பாண்டிருப்பில் ஊர் பூராகவும் நபரொருவர் நடமாடும் மதுபாண விற்பனையில்!
உலகையே ஒரு ஆட்டம் ஆடவைத்திருக்கும் கொரோணா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக நாடுபூராகவும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறிய நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பிரதேசத்தில் நபர் ஒருவர் மதுபாண விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உதயராசா (0779584005) என்ற பெயர் கொண்ட குறித்த நபர் EP BDZ-7831 எனும் இலக்கம் கொண்ட தனது மோட்டார் சைக்கிள்மூலம் வீடுகளுக்கு சென்று விற்பனையில் ஈடுபட்டுவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அவசர நடமாடும் மதுபாண சேவைக்காக அவர் இரட்டிப்புக்கு மேலான தொகையை அறவிட்டுவருவதாக அறியமுடிகின்றது.
குறித்த நடமாடும் மதுபாண விற்பனைச் சேவையினால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த குடும்பத்தலைவர்களே குறித்த நபரின் வாடிக்கையாளர்களாகவுள்ளதனால் அக்குடும்பங்கள் மேலும் இன்னல்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது..
0 comments :
Post a Comment