Monday, March 30, 2020

முஸ்லிம் சமூகத்திற்கு சட்டத்தரணி ரமீஸ் வழங்கும் சில அறிவுறுத்தல்கள்!

குறிப்பாக முஸ்லிம்கள் வசிக்கின்ற பகுதிகளில் கொரோனா வைரசு நோய் பரவ ஆரம்பித்துள்ளதனால் குறிப்பிட்ட நோய் பரவும் பிரதேசங்களுடன் முற்றாக தொடர்புகளை துண்டித்துக் கொள்ளவும். முஸ்லிம் சமூக உறுப்பினர்களுக்கிடையிலான இடைத்தொடர்பு ஏனைய சமூகத்தினரைவிட அதிக பிணைப்புக்கூடியதென்பதுடன், சனச்செறிவு அடிப்படையிலும் முஸ்லிம் வீடுகள் நெருக்கமாக்க் காணப்படுவதாலும் அதிகமானதொரு ஆபத்தான நிலைமையை எதிர் கொள்ள நேரிடலாம்.

பொருளாதார ரீதியாக சுயதொழில் - (கொள்வனவு விற்பனை) - வியாபார வாய்ப்பை பெரும்பான்மையான வருமான எமது சமூகத்தின் குறைந்த மற்றும் மத்திய தர குடும்பங்கள் பாரிய இடரிற்கு முகம் கொடுக்க நேரிடலாம்.

ஆகவே, வருமுன் காப்போம் (before prevention) என்றவாறு நடைமுறை சட்டங்கள் மற்றும் ஊரடங்கு சட்டத்தை மதித்து செயற்படுவதுடன், மற்றவர்களையும் அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு ஊரிலும் உள்ள கற்ற சிவில் சமூகத்தின் பிரதான கடப்பாடாகும்.

அரச மற்றும் மருத்துவ அறிவுறுத்தல்களைப் புறக்கணிப்பது தனக்கும், தனது குடும்பம் மற்றும் அனைத்து சமூகங்களிற்கும் செய்யும் துரோகமாகும். கொரோனா நோய் என்பது எயிட்ஸ் அல்ல முறையாக மருத்தும் பெற்ற பெரும்பான்மை குணமடைந்ததை நாம் அறிகிறோம்.

ஆகவே, எமது குடும்பம், கிராமம், ஊரினை நாம் பாதுகாப்போம். கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெறுவோம்.

-சட்டத்தரணி ரமீஸ் பஷீர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com