Wednesday, March 25, 2020

உலக நிதி நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார் ஜனாதிபதி!

கொரோனா என்றழைக்கப்படும் கொவிட் - 19 வைரசுத் தாக்குதலுக்கு உள்ளாகி இக்கட்டான நிலையில் உள்ள வளர்ந்து வரும் நாடுகள், சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால எல்லையை அவை நீடிப்புச் செய்ய வேண்டும் அல்லது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால எல்லையில் திருப்திகரமான சலுகை வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள்.

பலதரப்பு மற்றும் இருதரப்பு நிதி நிறுவனங்களுக்கு தனது கோரிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் உலக சுகாதர அமைப்பின் பணிப்பாளர் நாயகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு கோவிட் - 19 மக்கள் சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பிலான முகாமைத்துவத்திற்கு இவ்விடயம் பேருதவியாக இருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com