Friday, March 27, 2020

பசில் ராஜபக்சவின் நேரடிக்கண்காணிப்பில் ஜனாதிபதி விசேட செயலணி தனது பணிகளை ஆரம்பித்தது.

கொரோனா வைரஸ் காரணமாக ஆபத்தை எதிர் நோக்கியுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஒட்டுமொத்த மக்கள் வாழ்வினையும் உரிய முறையில்நடாத்திச் செல்வதற்கு அத்தியாவசியமான பொதுச் சேவைகளை வழங்குதல், வழிநடாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிமேதகு ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களினால்நியமிக்கப்பட்ட விசேட செயலணி தற்போது தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.

கௌரவ பிரதம அமைச்சர் அவர்களின் முழுமையான கண்காணிப்பின் கீழ் இந்த ஜனாதிபதி செயலணியின் வழிநடாத்தல் நடவடிக்கைகள் அலரி மாளிகையில் மேற்கொள்ளப்படுவதுடன், அதன் வழிநடாத்தல் மற்றும் கண்காணிப்புப் பணிகள் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ அவர்களின் தலைமையில் இடம்பெறுகின்றன.

• மின்சக்தி, நீர் வழங்கல், கழிவு முகாமைத்துவம்

• எரிபொருள் மற்றும் வாயு வழங்கல்

• அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களை வழங்குதல், பகிர்ந்தளித்தல் மற்றும் விலைக் கட்டுப்பாடு ஒருங்கிணைப்பு மற்றும்முகாமைத்துவம்

• பிரதேச மற்றும் மாவட்ட நிர்வாக நடவடிக்கைகள்ஒருங்கிணைப்பு மற்றும் முகாமைத்துவம்

• கிராமியப் பொருளாதாரத்தை நடாத்திச் செல்வதுதொடர்பான ஒருங்கிணைப்பு மற்றும் முகாமைத்துவம்

• தேசிய பொருளாதாரத்தை நடாத்திச் செல்வதுதொடர்பான ஒருங்கிணைப்பு மற்றும் முகாமைத்துவம்

ஆகிய பிரதான துறைகளின் கீழ் இந்த செயலணியின் பணிகள்மேற்கொள்ளப்படுகின்றன.

உணவு, நீர், மின்சாரம், நாளாந்த சம்பளம் பெறுவோரின்பிரச்சினைகள், கடற்றொழில், அத்தியாவசிய சேவைகளுக்கான போக்குவரத்துப் பணிகள்,கமத்தொழில் துறைகளுக்கு ஏற்புடைய அதிகாரிகளுடன் இன்று (2020.03.26) இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போதுஅத்தியாவசிய பொதுச் சேவைகளை வழங்குதல், மக்கள் வாழ்வினை உரிய முறையில் நடாத்திச்செல்வதுடன் தொடர்பான பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com