Saturday, March 28, 2020

பல்கலைக்கழகங்களில் மாணவர் பதிவு - கால எல்லை நீடிப்பு

2020ஆம் ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் பதிவு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லை ஏப்ரல் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க விடுத்துள்ள அறிக்கையில்,

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலமையைக் கருத்தில் கொண்டு 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான பதிவை எதிர்பார்த்துள்ள எந்தவொரு மாணவரும் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் இந்த கால எல்லையை மேலும் நீடிப்பதற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர நாயகம் நாலக கலுவேவ ஊடாக விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

2020ஆம் ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் பதிவு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லையை மேலும் 2 வாரங்களினால் நீடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, மாணவர்களைப் பதிவு செய்வதற்கான கால எல்லை மார்ச் மாதம் 26ஆம் திகதி வரையில் செல்லுபடியானதாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நாட்டின் நிலவும் நிலமையின் அடிப்படையில் இந்த கால எல்லை மேலும் 2 வாரங்களுக்கு அதாவது ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலமையைக் கருத்தில் கொண்டு 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான பதிவை எதிர்பார்த்துள்ள எந்தவொரு மாணவரும் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் இந்த கால எல்லையை மேலும் நீடிப்பதற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தயார் என தலைவர் மேலும் இதில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எதிர்கால திட்டம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் இணையதளத்திலும் ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பேராசிரியர் அமரதுங்க அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com