சரியான நேரத்தில் தக்க அடி கொடுப்பேன்! மைத்திரியின் சூழுரையால் அரசினுள் பூகம்பம்.
எதிர்வரும் 9 பாராளுமன்ற தேர்லுக்கான கூட்டமைப்பதில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றது. அதன் பிரகாரம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மன்றும் பொதுஜன பெரமுன விடையே பலசுற்றுப்பேச்சுக்கள் இடம்பெற்றபோதும் தீர்க்கமான முடிவு ஒன்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தினால் அரசாங்கத்திற்குள் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலன்னறுவையில் வார இறுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கலந்துகொண்டிருந்தார். அப்போது உரையாற்றிய அவர், நீர்க்காகம் ஒன்று மீன் ஒன்றைப் பிடித்து சொன்டில் வைத்திருந்தபோது, திடீரென வந்த கழுகு அந்த மீனைப் பறித்துச் சென்றது. அதேபோலவே நானும் திடீரென அதிரடி ஆட்டத்தை ஆரம்பிப்பேன். கழுகைப் போல சரியான நேரத்தில் அடிகொடுப்பேன் என்று கூறியிருக்கின்றார்.
மைத்திரியின் இந்தக் கருத்து தற்போது அரச தரப்பினரிடையே பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. யாரை இலக்கு வைத்து இப்படி அவர் சொல்லியுள்ளார் என்று அரச தரப்பினர் தற்போது அலசி ஆராய்ந்து வருகின்றார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
2014ம் ஆண்டின் இறுதியில் காலை 6 மணிவரை மஹிந்தவுடன் அப்பம் உண்டுகொண்டிருந்த அவர் மறுநாள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்லில்போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான பின்னணி ஒன்றை கொண்ட மைத்திரி தற்போது இடம்பெற்ற கூட்டுக்கான பேச்சுக்களில் திருப்தியடைந்திருக்கவில்லை என்று அறியமுடிகின்றது.
0 comments :
Post a Comment