புலிகள் வன்முறையை கையிலெடுத்ததால் இருந்ததையும் இழந்தோம்.. அடித்துக் கூறுகின்றார் த.தே.கூ மட்டு வேட்பாளர் நளினி
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இம்முறை பெண்ணொருவர் களமிறக்கப்படுகின்றார் என்றும், மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சுமந்திரனின் தனிச் செல்வாக்கினால் அவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது என்ற விமர்சனங்கள் நிலவி வருகின்றது.
இந்நிலையில், நளினி எனப்படும் குறித்த பெண் இன்று மட்டக்களப்பில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் புலிகள் வன்முறையை கையிலெடுத்ததனால் தமிழ் மக்கள் இருந்ததையும் இழந்து நிற்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
புலிகளியக்தை மிக மோசமாக விமர்சித்துவந்துள்ளீர்களே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது மேற்கண்டவாறு கூறியுள்ள அவர், புலிகள் மாத்திரம் அல்ல சகல இயக்கங்களுமே வன்முறையை கையிலெடுத்திருந்தது என்று ஆணித்தரமாக கூறினார்.
இவ்விடத்தில் புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்றும் புலிகளை விமர்சிப்போர் தங்களது ஜனநாயக உரிமைகளை அனுபவிப்பதற்கு உரித்தர்ரவர்களா என்ற கேள்விகளை குறித்த பத்திரிகையாளரிடம் இலங்கைநெட் முன்வைக்கின்றது.
அத்துடன் தமிழ் இயக்கங்கள் யாவும் வன்செயலை கையிலெடுத்திருந்தவர்களென்றும், அவர்களால் தமிழ் மக்கள் இருந்தவற்றையும் இழந்துள்ளார்கள் என்றும் தெரிவிக்கும் நளினி தனது வலது மற்றும் இடது கரங்களில் யாரை கோர்த்துக்கொண்டு தேர்தலில் குதிக்கின்றார் என்பதை மறந்துவிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளாக ரெலோ மற்றும் புளொட் இயக்கத்தை வைத்துக்கொண்டு அவர்கள் வன்செயலாளர்கள் என்று கூறுகின்றார். மறுபுறத்தில் தான் வன்செயலுக்கு எதிரானவள் என்று கூறுகின்றார். அவ்வாறாயின் வன்செயலாளர்கள் உள்ள கூட்டமைப்பில் தங்களுக்கு சீட்டு கிடைக்குமாயின் , அவர்கள் வன்செயலாளர்கள் இல்லையா என்ற கேள்வியையும் இலங்கைநெட் எழுப்புகின்றது.
...............................
0 comments :
Post a Comment