அனுராதபுர சிறைச்சாலையினுள் கலவரம்! துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி! மூவர் காயம்!
அனுராதபுரம் சிறைச்சாலையினுள் பதட்டத்துடனனா கலவரநிலையொன்று தோன்றியுள்ளதாக தெரியவருகின்றது. நிலைமைகள கட்டுப்படுத்த சிறைக்காவலர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஸ்தலத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக அனுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிறைக்கைதியொருவர் ஆளாகியிருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்தே சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் சிறைக்கைதிகளுக்கும் முறுகல் நிலை உருவானதாக அறியமுடிகின்றது.
சிறைச்சாலையினுள் ஏற்பட்டுள்ள அசமந்த நிலைமையினை கட்டுப்பாட்டினுள் கொண்டுவர பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலையினுள் நுழைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலதிக தகவல்கள் தொடரும்...
0 comments :
Post a Comment