Thursday, March 26, 2020

கடவுள் கடாட்சத்தால் இலங்கைக்கு நல்ல காலமே! இன்று கொரானோ தொடர்பில் யாரும் பதிவாகவில்லை

பல நாடுகளிலும் கொரோனா தொற்றுக்கு பலரும் பலியாகி வருகின்ற வேளையில் இலங்கையில் நால்வர் முழுமையாக சுகமடைந்து வீடுகளை நோக்கிச் சென்றனர் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

சென்ற 24 மணித்தியாலயங்களுக்குள் இலங்கையில் எந்தவொரு நபரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேசந்தர்ப்பத்தில் கோவிட் -19 எனும் ஆட்கொல்லி வைரசுக்கு ஆளாகி, ஐ.டீ.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குறித்த வைரசினால் யாருமே நேற்றைய தினம் இந்நாட்டிலிருந்து பதிவாகவில்லை எனவும் தற்போது நோயாளிகளாக 102 பேர் மட்டுமே உள்ளனர் எனவும், அவர்களில் மூவர் பூரண சுகமடைந்து தத்தமது இல்லங்களை நோக்கிச் சென்றுள்ளனர் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

எதுஎவ்வாறாயினும் கொவிட் - 19 வைரசின் பாதிப்புக்குள்ளாகி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றொருவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

இவ்வாறு நோயாளிகள் வைத்தியர்களின் அயராத உழைப்பினால் நோயாளிகள் பூரண சுகமடைந்து வருகின்ற வேளையில், நாட்டில் வெவ்வேறு இடங்களில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோர் என சந்தேகிக்கப்படுபவர்கள் 255 பேர் உள்ளனர் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com