Wednesday, March 25, 2020

ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும் நாட்டிலுள்ள சகல ஒசுசல மருந்தகங்களும் திறந்திருக்குமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும் நாட்டிலுள்ள சகல ஒசுசல மருந்தகங்களும் திறந்திருக்குமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகள், மருந்தகங்கள் என்பனவற்றிலிருந்து நாளாந்தம் மருந்துகளை கொள்வனவு செய்வோர் ஊரடங்குச்சட்டத்தினால் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.

இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சு இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

நோயாளர்களின் நோய் தொடர்பான அட்டை, மருந்துச் சீட்டு என்பனவற்றை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதிகளில் அனுமதிப் பத்திரங்களாக பயன்படுத்த முடியும்.

மருந்தகங்களில் பணியாற்றுவோருக்கும், மருந்துகளை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்குமாறு சுகாதார அமைச்சு பொலிசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com