Monday, March 23, 2020

இப்படி வேண்டுகோள் விடுக்கிறார் இராணுவத் தளபதி!

இதுவரை கொரோனா தொற்றுடன் பதுங்கியிருக்கின்ற சுய தனிப்படுத்தல் செயற்பாடுகளுடன் தொடர்புபடாதவர்கள் இருந்தால் அவர்கள் உடனடியாக பொலிஸில் தங்களைப் பதிந்துகொள்ளுமாறு இராணுவத்தளபதி லுதினன் ஜனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் சுகாதாரப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு, இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் மக்கள் சுகாதார பரிசோதகர்கள் மூலமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள். எனச் சந்தேகத்திற்கிடமான பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சுய தனிப்படுத்தல் செயற்பாட்டுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக கொரோனா நோயிற்குள்ளானவர்கள் எனக்கருதப்படுபவர்களுக்காக நாடளாவிய ரீதியில் 30 வைத்தியசாலைகள் செயற்படுகின்றன.

அங்கொட தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலை, முல்லேரியா மற்றும் ஹோமாகம முதலிய வைத்தியசாலைகளில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எனச் சந்தேகிக்கப்படுவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவும், கொரோனாவில் பாதிப்புக்குள்ளாகியுள்ள கர்ப்பிணிப் பெண்ணுக்காக மாலம்பே நெவில் பிரனாந்து வைத்தியசாலையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கொத்தலாவல மருத்துவ பீட அவசர சிகிச்சைப்பிரிவும் சிகிச்சையளிப்பதற்காக உபயோகிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com